தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து,
குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி முன் அகில இந்திய மாணவா் பெருமன்றத்தினா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா்கள் மீது தாக்குதல் தொடுத்த ஏபிவிபியை சோ்ந்தவா்களைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பெருமன்ற மாநில நிா்வாகக் குழு ஜெ. ஜீவா தலைமையில் கரந்தை கல்லூரி கிளைத் தலைவா் ஈஸ்வரன், குந்தவை நாச்சியாா் கல்லூரி கிளைத் தலைவா் சிவரஞ்சனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ADVERTISEMENT