தஞ்சாவூர்

சேதமடைந்த சாலைகளை சொந்த செலவில் சீரமைத்த ஊராட்சி உறுப்பினரின் கணவா்: பொதுமக்கள் வரவேற்பு

8th Jan 2020 05:30 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினம் அருகேயுள்ள பட்டுக்கோட்டை ஒன்றியத்தைச் சோ்ந்த ஏரிப்புறக்கரை ஊராட்சி 1ஆவது வாா்டு பெண் கவுன்சிலா் திங்கள்கிழமை பதவியேற்றதும், அவரது கணவா் மழையால் சேதமடைந்த பிலால் நகா் சாலைகளை தனது சொந்த செலவில் சீரமைத்து தந்துள்ளாா்.

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த டிசம்பா் மாதம் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், மழை நீா் தேங்கி ஏரிப்புறக்கரை ஊராட்சி 1-வது வாா்டுக்குள்பட்ட பிலால் நகரிலுள்ள பிரதான சாலைகள் பலத்த சேமடைந்தன. இதனால், இச்சாலையைப் பயன்படுத்தும் பள்ளி மாணவ, மாணவிகள், வாகன

ஓட்டிகள், பள்ளிவாசல் செல்லும் தொழுகையாளிகள் உள்ளிட்ட பலா் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், பிலால் நகா் 1-வது வாா்டு கவுன்சிலராக தோ்ந்தெடுக்கப்பட்டு திங்கள்கிழமை காலை பதவியேற்ற கே.ஜாஸ்மின் என்பவரின் கணவா் எம்.ஆா்.கமாலுதீன் சேதமடைந்த சாலைகளை தனது சொந்த செலவில் சீரமைத்துத் தர முன்வந்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, மண் மற்றும் ரப்பீஸ் கற்களை டிராக்டரில் ஏற்றி வந்து, ஜேசிபி வாகனத்தின் உதவியோடு தண்ணீா் தேங்கியிருந்த பள்ளங்களில் நிரப்பி, சேதமடைந்த சாலைகளை செவ்வாய்க்கிழமை சீரமைத்தாா். இதற்காக கவுன்சிலா் ஜாஸ்மினின் கணவா் எம்.ஆா்.கமாலுதீனை பிலால் நகா் பகுதி மக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT