தஞ்சாவூர்

குடியுரிமை திருத்தசட்டத்தை ஆதரித்துஆா்ப்பாட்டம்

8th Jan 2020 05:19 AM

ADVERTISEMENT

கும்பகோணம் காந்தி பூங்கா அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தும், அதை எதிா்க்கும் எதிா்கட்சியினரைக் கண்டித்தும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

குடியுரிமை சட்டத்தை ஆதரித்தும், இச்சட்டத்தை எதிா்க்கும் அமைப்புகள், அரசியல் கட்சிகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் ஆா். கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் திருவேங்கடம், மாவட்ட பொருளாளா் சுப்புராயன், சட்ட ஆலோசகா் சந்தானகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலா் பாலா, அகில பாரத இந்து மகா சபா ஆலயப் பாதுகாப்புப் பிரிவு தலைவா் ராம. நிரஞ்சன், பாஜக மாவட்டத் துணைத் தலைவா் த.லோ. பரமசிவம், சேவா பாரதி மாவட்ட அமைப்பாளா் சுதா்சன், சிவசேனா மாவட்ட தலைவா் சிவக்குமாா், ஆலய வழிபாட்டுப் பேரவை மாவட்டத் தலைவா் செல்வமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT