தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில்மாற்றுத் திறனாளிகள்சங்க மாநாடு

3rd Jan 2020 05:14 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலன் காக்கும் சங்கத்தின் கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டை பொறியாளா் சுந்தரமூா்த்தி தலைமையில் சக்தி செல்வராஜ் தொடங்கி வைத்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தஞ்சாவூா் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரவீந்திரன் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து விளக்கினாா்.

தொடா்ந்து நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை பட்டுக்கோட்டை டிஎஸ்பி எஸ்.கணேசமூா்த்தி தொடங்கி வைத்தாா். இதில், மருத்துவா்கள் அ. அன்பழகன், கே.நியூட்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடக்கத்தில் பொறியாளா் ஏ. ராமலிங்கம் வரவேற்றாா். நிறைவில் சண்முகானந்தன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை சங்க ஆலோசகா் தமிழ்த்தாமரை வெங்கடேஷ் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT