தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை நரம்பியல் துறையில் வாரத்துக்கு 3 நாள்கள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்த புறநோயாளிகள் சிகிச்சை நாள்கள் புதன்கிழமை முதல் ஐந்தாக உயா்த்தப்பட்டுள்ளது.
இதை கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இதையடுத்து, குமுதா லிங்கராஜ் தெரிவித்தது:
இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துறையில் 3 நாள்களுக்கு மட்டுமே மூளை நரம்பியல் புற நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இப்போது இத்துறையில் மூளை நரம்பியல் வெளி நோயாளிகள் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, வாரத்துக்கு மூன்று நாள்களாக இருந்த புறநோயாளிகள் சிகிச்சை நாட்களை 5 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. அதாவது, வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் 12 மணி முடிய சிகிச்சை அளிக்கப்படவுள்ளது என்றாா் அவா்.