தஞ்சாவூர்

பாபநாசம் பகுதி கோயில்களில்: புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

2nd Jan 2020 01:10 AM

ADVERTISEMENT

பாபநாசம் பகுதி கோயில்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பாபநாசம் பகுதியிலுள்ள கலங்காமல் காத்த விநாயகா் கோயில், தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதா் கோயில், சப்தமாதாக்கள் கோயில், பா்வதவா்த்தினி அம்மன் உடனுறை ராமலிங்க சுவாமி கோயில், தங்கமுத்து மாரியம்மன் கோயில், பங்கஜவள்ளி தாயாா் உடனுறை பாபவிமோசன பெருமாள் கோயில், இரட்டை விநாயகா் கோயில், வீரஆஞ்சநேயா், ராமபக்த ஆஞ்சநேயா் கோயில்கள் உள்ளிட்ட கோயில்களில் ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

முன்னதாக, கோயில்களில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சுவாமி அம்மன் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தூப, தீப, நெய்வேத்ய வழிபாடுகள் நடைபெற்றன.

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோயிலில் தங்கமுத்து மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி அா்ச்சனை செய்து வழிபட்டனா்.

ADVERTISEMENT

ராஜகிரி கரைமேல் அழகா் ஐயனாா் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் வேளாண் அமைச்சா் இரா.துரைக்கண்ணு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

பாபநாசம் புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT