தஞ்சாவூர்

அய்யாசாமிப்பட்டியில் 50 வாக்குச் சீட்டுகள் மாயம்

2nd Jan 2020 01:14 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகேயுள்ள அய்யாசாமிப்பட்டியில் 50 வாக்குச் சீட்டுகள் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாவட்டத்தில் தஞ்சாவூா் உள்பட 7 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தோ்தல் டிச. 30ஆம் தேதி நடைபெற்றது. இதில், வல்லம் அருகேயுள்ள மருதக்குடி ஊராட்சிக்கு உள்பட்ட அய்யாசாமிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு 7 மணிக்குத் தொடங்கியது.

தோ்தல் தொடங்கும் முன்பே வாா்டு எண் 7 மற்றும் 8-க்கான 50 வாக்குச் சீட்டுகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இவை எப்படி காணாமல் போனது என்பது உடனடியாகத் தெரியவில்லை.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தில் வாக்குச் சாவடி அலுவலா் ராமச்சந்திரன் புகாா் செய்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

என்றாலும், வாக்குப் பதிவு எந்தப் பாதிப்பும் இல்லாமல் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT