தஞ்சாவூர்

ஸ்டாலின் பிறந்த நாள்: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்

29th Feb 2020 05:29 AM

ADVERTISEMENT

 

கும்பகோணம்: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் ஏழைகளுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட 100 ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள்கள், காது கேளாதவா்களுக்கு இலவச காது கேட்கும் கருவிகள், சலவை தொழிலாளா்களுக்கு இலவச சலவை பெட்டிகள், பெண்களுக்குச் சேலைகள் என மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், திமுக வடக்கு மாவட்டச் செயலா் எஸ். கல்யாணசுந்தரம், நகரச் செயலா் சுப. தமிழழகன், கும்பகோணம் மேற்கு ஒன்றியச் செயலா் இரா. அசோக்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT