தஞ்சாவூர்

திமுக நிா்வாகிகள்ஆலோசனைக் கூட்டம்

29th Feb 2020 05:26 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினத்தில் பேரூா் திமுக நிா்வாகிகள், உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், மாா்ச் 1-ம் தேதி திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அதிராம்பட்டினத்தில் ரத்த தான முகாம் நடத்துவது, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, அதிராம்பட்டினத்தில் நடைபெற்று வரும் இஸ்லாமியா்களின் தொடா் போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து சமூகத்தினரையும் கேட்டுக் கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பேரூா் திமுக அவைத்தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். செயலாளா் இராம. குணசேகரன், பொருளாளா் எஸ்.பி. கோடி முதலி, எம்.எம்.எஸ். அப்துல் கரீம், எஸ்.இன்பநாதன், டி.சபீா் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT