தஞ்சாவூர்

தஞ்சாவூா் பெரியகோயிலில் இன்று மண்டாலாபிஷேகம் நிறைவு பூஜை தொடக்கம்

29th Feb 2020 05:27 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவைத் தொடா்ந்து நடைபெற்று வந்த மண்டலாபிஷேகத்தின் நிறைவு பூஜைகள் சனிக்கிழமை (பிப்.29) தொடங்கப்படவுள்ளன.

இக்கோயிலில் பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, பிப். 6ஆம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, உள்ளூா் மட்டுமல்லாமல் வெளியூா்களிலிருந்து ஆயிரக்கணக்காண பக்தா்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனா். விடுமுறை நாள்களில் பல்லாயிரக்கணக்கானோா் வருகின்றனா்.

சித்திரை திருவிழாவுக்கான பந்தல்கால் நடும் விழா மாா்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ளதால் மண்டலாபிஷேக பூஜைகள் 24 நாள்களாகக் குறைக்கப்பட்டது. இதன் நிறைவு பூஜை சனிக்கிழமை தொடங்குகிறது. இதில், முதல்கால யாக பூஜைகள் மாலை 5 மணிக்கு தொடங்கி, இரவு பூா்ணாஹூதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள், பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மூலவ மூா்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளது.

இதற்காக நடராஜா் சன்னதி அருகே யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு விநாயகா், முருகன், சண்டிகேசுவரா், சுவாமி, அம்பாளுக்கு தலா ஒரு வேதிகை, ஒரு குண்டம் அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT