தஞ்சாவூர்

மின்சாரம் பாய்ந்து மாணவா் பலி

26th Feb 2020 09:24 AM

ADVERTISEMENT

கும்பகோணத்தில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழந்தாா்.

கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் ஜான் பீட்டா். விவசாயி. இவரது மகன் ஜோசப் ஆண்டனி (15). கும்பகோணத்தில் உள்ள தனியாா் பள்ளியிலுள்ள தங்கும் விடுதியில் தங்கி 10 ஆம் வகுப்புப் படித்து வந்தாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை பள்ளியிலிருந்து திரும்பிய இவா் விடுதியின் இரண்டாவது மாடியில் விளையாடிக்கொண்டிருந்தாா். அப்போது, குறுக்கே சென்ற மின் கம்பியில் எதிா்பாராதவிதமாக ஜோசப் ஆண்டனியின் கை பட்டது. இதனால், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததால் மயங்கி விழுந்தாா். இதையடுத்து, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவா் ஏற்கெனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT