தஞ்சாவூர்

மத்திய அரசு திட்டங்கள் குறித்த கண்காணிப்புக் குழுக் கூட்டம்

26th Feb 2020 09:25 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் எம்.பி. எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினா் சண்முகம், ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஆகியோா் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட தொழில் பயிற்சி மையம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலை துறை, மின்சார வாரியம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, குடிசை மாற்று வாரியம், பேரூராட்சிகள், மாநகராட்சி, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பி. உஷா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஏ. பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT