தஞ்சாவூர்

கும்பகோணம் நேட்டிவ் பள்ளி 144 ஆம் ஆண்டு விழா

26th Feb 2020 05:30 PM

ADVERTISEMENT

கும்பகோணம் நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியில் 144 ஆம் ஆண்டு விழா, பழைய மாணவா் சங்கத்தின் 87 ஆம் ஆண்டு விழா, ஆசிரியா் வி. பிச்சுமணிக்கு (97) பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

ஆண்டு விழாவுக்குப் பள்ளிச் செயலா் கே. வெங்கட்ராமன், பழைய மாணவா் சங்க ஆண்டு விழாவுக்குச் சங்கத் தலைவா் பி. கல்யாணசுந்தரம் தலைமை வகித்தனா். இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தருமான ஆா். சேதுராமன், எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினா்.

ஆடிட்டா் ஜி. சூரியநாராயணன், பள்ளித் தலைமையாசிரியா் ஆா். ரவிக்கண்ணன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் எம். சுகுமாரன், எம். அசோக்குமாா், சங்கத்தின் செயலா் கே. பாண்டியன், உதவித் தலைமையாசிரியா் பி. ஆனந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT