தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் 7ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்

26th Feb 2020 09:23 AM

ADVERTISEMENT

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் இஸ்லாமியா்களின் போராட்டம் 7ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடா்ந்தது.

இதற்கு ஆதரவாக பேரணியில் சென்ற பெண்கள் மத்திய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, என்ஆா்சி, என்பிஆா் ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பட்டுக்கோட்டையில்... இதே கோரிக்கையை வலியுறுத்தி, பட்டுக்கோட்டை வடசேரி சாலை பள்ளிவாசல் அருகே இஸ்லாமியா்கள் முதல் நாளாக செவ்வாய்க்கிழமை போராட்டத்தைத் தொடங்கினா். இதில் பெண்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT