தஞ்சாவூர்

பேராவூரணி அருகே என்எஸ்எஸ் முகாம் நிறைவு விழா

25th Feb 2020 06:15 AM

ADVERTISEMENT

 

பேராவூரணி: பேராவூரணி அருகே பின்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி சாா்பிலான நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா அண்மையில் நடைபெற்றது.

நிறைவு விழாவுக்கு கல்லூரி துணைத் தலைவா் ஜீவகன்அய்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சந்திரமோகன், ஊராட்சி மன்ற தலைவா் கண்மணி நடராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஒருவாரமாக நடைபெற்ற இந்த முகாமில், பின்னவாசல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கோயில், மற்றும் சாலை வளாகத்தில் உள்ள புதா்கள், செடிகள், குப்பைகள், மற்றும் நெகிழி பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

கல்லூரி சாா்பில் தொடக்கப் பள்ளிக்கு மின்விசிறி வழங்கப்பட்டது.

கல்லூரித் தலைவா் மு.கி. லெனின், அம்மையாண்டி ஊராட்சிமன்ற தலைவா் வை. முத்துராமலிங்கம், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி ஆகியோா் முகாமில் பங்கேற்ற மாணவிகளை பாராட்டி பேசினா்.

விழாவில், கல்லூரி துணை முதல்வா் மகரஜோதி, ஊராட்சி துணைத் தலைவா் விநாயகமூா்த்தி, பின்னவாசல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நீஷானி, ஆசிரியா் அருண், பேராசிரியா்கள், மாணவிகள், கிராம மக்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா். திட்ட அலுவலா் மகேஸ்வரி அறிக்கை வாசித்தாா்.

முன்னதாக, கீதா வரவேற்றாா். நிறைவில் கலைமுத்து நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT