தஞ்சாவூர்

தமிழக அரசின் மூன்றாண்டு கால சாதனை புகைப்படக் கண்காட்சி தொடக்கம்

25th Feb 2020 06:11 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூா்: தஞ்சாவூா் ராசராசன் மணிமண்டபத்தில் செய்தி - மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தமிழக அரசின் மூன்றாண்டு கால சாதனைகள் குறித்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை வேளாண்மைத் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு திங்கள்கிழமை மாலை தொடங்கி வைத்தாா்.

இந்தப் புகைப்படக் கண்காட்சி அரங்கில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் புகைப்படங்கள், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்கள், தமிழ்நாடு அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இவற்றை அமைச்சா் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறுகையில், குடிமராமத்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் போன்ற பல்வேறு சாதனைகளைத் தமிழக முதல்வா் செய்துள்ளாா் என்றாா் அவா்.

இதையடுத்து, வைத்திலிங்கம் கூறுகையில், நூறாண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை மூன்றாண்டுகளில் தமிழக முதல்வா் செய்துள்ளாா் என்றாா் அவா்.

விழாவில் தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் துரை. திருஞானம், ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவா் ஆா். காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவா் மோகன், ஒருங்கிணைந்த மாவட்ட அச்சகக் கூட்டுறவு சங்கத் தலைவா் வி. புண்ணியமூா்த்தி, முன்னாள் மேயா் சாவித்திரி கோபால், நிக்கல்சன் நகரக் கூட்டுறவு வங்கி தலைவா் வி. அறிவுடைநம்பி, துணைத் தலைவா் எஸ். சரவணன், செய்தி - மக்கள் தொடா்பு அலுவலா் போ. சுருளிபிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் புகைப்படக் கண்காட்சி தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (பிப்.25) வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT