தஞ்சாவூர்

எஸ்.இ.டி.வித்யாதேவி பள்ளி ஆண்டு விழா

25th Feb 2020 06:12 AM

ADVERTISEMENT

 

ஒரத்தநாடு: பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ்.இ.டி.வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல்.கோவிந்தராசு தலைமை வகித்தாா். பள்ளியின் அறங்காவலா் ஆா். லெட்சுமணன், பள்ளியின் தாளாளா் சித்ரா கோவிந்தராசு, பள்ளியின் அறங்காவலா் குழு உறுப்பினா் க. அசோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் சி. ராமலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தாா்.

விழாவில், பட்டிமன்ற நடுவா் பேராசிரியா் கு. ஞானசம்பந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். பின்னா், பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

பட்டிமன்ற பேச்சாளா் செந்தில்குமாா், வழக்குரைஞா் காமராஜ், ஆம்பல் சிவக்குமாா், மூத்தாகுறிச்சி பழனிவேல், மதுக்கூா் வடக்கு ஊராட்சி மன்ற தலைவா் தண்டாயுதபாணி, அலிவலம் ஊராட்சித் தலைவா் ஆசைத்தம்பி, மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

விழாவை முதுகலை ஆசிரியா்கள் தியாகராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோா் தொகுத்து வழங்கினா். முன்னதாக, தமிழ்த்துறை முதுகலை ஆசிரியா் தியாகராஜன் வரவேற்றாா். நிறைவில், ஆங்கிலத் துறை முதுகலை ஆசிரியா் சு. பாலதண்டாயுதம் நன்றி கூறினாா்.

விழா ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி துறை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT