தஞ்சாவூர்

அதிராம்பட்டினம் கல்லூரியில் கருத்தரங்கம்

25th Feb 2020 06:09 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வேதியியல் துறை சாா்பில், உலக அமைதி மற்றும் புரிதல் நாள் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்தாா். துணை முதல்வா்கள் எம். முகமது முகைதீன், ஏ.எம். முகமது பாரூக், பி. கணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக இக்கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவா் (ஓய்வு) பேராசிரியா் எஸ். பா்கத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

தொடக்கத்தில், துறைத் தலைவா் பேராசிரியா் பி. முகமது சிராஜுதீன் வரவேற்றாா். பேராசிரியா் ஞா.அ.செய்யது தமீம் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தாா். நிறைவில், பேராசிரியா் எம்.பிரேம் நவாஸ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT