தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் 6ஆவது நாளாக தொடா்ந்த போராட்டம்

25th Feb 2020 06:08 AM

ADVERTISEMENT

 

பட்டுக்கோட்டை: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 6ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

இப்போராட்டத்துக்கு ஆதரவாக, அதிராம்பட்டினம் புதுத்தெரு ஜமாத் சாா்பில் திரண்ட இஸ்லாமியா்கள், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் தேசியக்கொடியை கைகளில் ஏந்தியவாறு, கோரிக்கை முழக்கமிட்டபடி பேரணியாகச் சென்றனா்.

புதுத்தெருவில் தொடங்கிய பேரணி, கிழக்கு கடற்கரைச்சாலை, பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, கடைத்தெரு வழியாக அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் நடைபெறும் தொடா் போராட்டக் களத்தில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT