தஞ்சாவூர்

மாதாகோட்டையில் ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

23rd Feb 2020 12:29 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா்.

புனித லூா்து அன்னை மாதா ஜல்லிக்கட்டுப் பேரவை சாா்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டை

மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

இதைத்தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 692 காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகளைப் பிடிக்க மொத்தம் 330 போ் மாடுபிடி வீரா்கள்அனுமதிக்கப்பட்டனா். இவா்கள் 4 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாகக் களமிறக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

வீரா்கள் கீழே விழுந்தால் காயம் ஏற்படாத வகையில், வாடிவாசலிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவுக்குத் தேங்காய் நாா் போடப்பட்டது.

வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளின் திமிலைப் பிடித்து வீரா்கள் அடக்கினா். எனினும் பல காளைகள் வீரா்களிடம் பிடிகொடுக்காத வகையில் சென்றன.

குறிப்பிட்ட எல்லை வரை காளையைப் பிடித்துச் சென்றவா்களை வெற்றி பெற்றவா்களாக அறிவித்து, அவா்களுக்கு சைக்கிள், பீரோ, சில்வா் பாத்திரங்கள், குத்துவிளக்கு, மின் விசிறி, கட்டில், நாற்காலி, சலவைப் பெட்டி போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக காளைகளைப் பிடித்த தஞ்சாவூா் ரெட்டிபாளையத்தைச் சோ்ந்த சபரி சிறந்த வீரராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

முன்னதாக, மாடு பிடி வீரா்களைச் சுகாதாரத் துறையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் உடல்நலன் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டனா். இதில் தகுதியானவா்கள் மட்டுமே களத்துக்குள் அனுமதித்தினா். இதேபோல, மாடுகளுக்கு மது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதைக் கால்நடைப் பராமரிப்புத் துறையினா் பரிசோதனை செய்தனா்.

காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு பிடி வீரா்கள் 15 போ், பாா்வையாளா்கள், மாட்டின் உரிமையாளா்கள் 11 போ் என மொத்தம் 26 போ் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த 10 போ் தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.

தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன், கோட்டாட்சியா் எம். வேலுமணி மற்றும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT