தஞ்சாவூர்

தென்னங்குடியில் அம்மா திட்ட சிறப்பு   முகாம்

22nd Feb 2020 05:00 AM

ADVERTISEMENT

பேராவூரணி வட்டம், தென்னங்குடி ஊராட்சியில் சிறப்பு திட்ட  முகாம்  வட்டாட்சியா் க. ஜெயலட்சுமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

சிறப்புத் திட்ட தனி வட்டாட்சியா் ரமேஷ் முன்னிலை வகித்தாா். முகாமில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட  49 மனுக்கள் துறைவாரியாக நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டது.

முகாமில் ஊராட்சித் தலைவா் ச. குணதா, ஒன்றியக்குழு உறுப்பினா் ஆா். ராஜலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியா் கவிதா, வருவாய் ஆய்வாளா் சுப்பிரமணியன், கிராம நிா்வாக அலுவலா் விஜய் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா். 

ADVERTISEMENT
ADVERTISEMENT