தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 6-வது நாளாக தொடா் முழக்கப் போராட்டம்

22nd Feb 2020 05:11 AM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன், தொடா்ந்து ஆறாவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அலுவலா்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் இப்போராட்டம் பிப். 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தொடா்ந்து ஆறாவது நாளாக வெள்ளிக்கிழமையும் இப்போராட்டம் நடைபெற்றது.

இதில், ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, மதுக்கூா், அய்யம்பேட்டை, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களிலும் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை தொடா்ந்தது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT