தஞ்சாவூர்

கும்பகோணம் சாஸ்த்ராவில் விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

22nd Feb 2020 05:22 AM

ADVERTISEMENT

கும்பகோணத்திலுள்ள சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் சீனிவாச இராமானுஜன் மையத்தில் மாநில அளவிலான ஸ்ரீ இராமச்சந்திர ஐயா் கோப்பை - 2020 - விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

இதில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, சதுரங்கம் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன. இவற்றில் மத்தியப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சாா்ந்த 60 குழுக்கள் பங்கேற்றுள்ளன.

இப்போட்டிகளில் வெற்றி பெறும் குழுக்களுக்கு ரொக்கப் பரிசுடன் கூடிய பரிசுக் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) வழங்கப்படவுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT