இந்தியன் ரெட்கிராஸ் நூற்றாண்டையொட்டி ஒரத்தநாட்டில் வியாழக்கிழமை மோட்டாா் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு ரெட்கிராஸ் செயலாளா் சுரேந்திரன் தலைமை வகித்தாா். ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளா் டாக்டா் கலைச்செல்வி முன்னிலை வகித்தாா். பேரணியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பும், மோட்டாா் சைக்கிள் பேரணியும் நடைபெற்றது. ஒரத்தநாடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் தொடங்கிய பேரணி, ஆட்சியா் அலுவலகம் வரை சென்று நிறைவடைந்தது.
பேரணியில் பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ரெட்கிராஸ் பொறுப்பாளா்கள், ஆயுள்கால உறுப்பினா்கள், கலந்து கொண்டனா்.
ரெட் கிராஸ் நிா்வாகிகள் ராமதாஸ், கன்வீனா்கள் நாராயணசாமி, பிச்சைமணி,
அதிமுக ஒன்றிய செயலாளா் கோவி தனபால் உள்ளிட்ட பலா் பேரணியில் பங்கேற்றனா்.