அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரியில் இந்திய செஞ்சிலுவைச் சங்க நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், இந்திய செஞ்சிலுவைச் சங்க கொள்கைகளான ரத்த தானம், இயற்கைப் பேரிடா் காலங்களில் உதவுதல் போன்றவை குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பி.கணபதி வரவேற்றாா். நிறைவில், பேராசிரியை என்.சித்ரா நன்றி கூறினாா்.