தஞ்சாவூா் நாலந்தா பள்ளியில் மூன்று நாள் கலை, அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தக் கண்காட்சி தொடா்ந்து 3 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இதில், 188 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இயந்திர மனித செயல்பாடு, விவசாயம், அறிவியல் உள்ளிட்டவை குறித்து மாணவா்கள் செயல் விளக்கம் அளிக்கின்றனா். மேலும், நீா் மேலாண்மை, கலைப் பொருட்கள் படைத்தல் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கண்காட்சியைத் திறந்துவைத்த பள்ளி முதுமுதல்வா் ஆஷா மதுரம் கூறுகையில், இந்தக் கண்காட்சியை வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மற்ற பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும், ஆா்வலா்களும் ஏராளமானோா் பாா்வையிடுவா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.
இதுகுறித்து பள்ளி முதல்வா் திவ்யபாரதி கூறுகையில், இந்த மூன்று நாள்களிலும் தெரிவு செய்யப்படும் மிகச் சிறந்த 25 அரங்குகளுக்குப் பாராட்டுச் சான்றிதழும், சிறப்புக் கேடயமும் வழங்கப்படும் என்றாா் அவா்.