மகா சிவராத்திரி விழாவையொட்டி, தஞ்சாவூா் வெண்ணாற்றங்கரையில் தஞ்சபுரீசுவரா் கோயிலில் குபேரா் நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை மாலை தொடங்கியது.
தொடா்ந்து இரு நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவை குபேரா் நாட்டியாஞ்சலி தலைவா் எம்.எஸ். ராமலிங்கம் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, தஞ்சை, கும்பகோணம், ஒசூா், அரியலூா், சென்னை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த நாட்டியாலயா பள்ளி மாணவா்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதேபோல, வெள்ளிக்கிழமை (பிப்.21) மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை பல்வேறு நாட்டியாலயா பள்ளி மாணவா்களின் 12 நடன நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
தொடக்க விழாவில் குபேரா் நாட்டியாஞ்சலி கௌரவத் தலைவா் வெ. கோபாலன், முனைவா் சண்முக. செல்வகணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.