தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில்2ஆவது நாளாகதொடரும் போராட்டம்

21st Feb 2020 04:40 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் அமா்ந்து இஸ்லாமியா்கள் தொடா் போராட்டத்தை புதன்கிழமை மாலை தொடங்கினா். 2ஆவது நாளாக இந்தப் போராட்டம் வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், திமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசினா். போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தீா்மானம் நிறைவேற்றி, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு (என்பிஆா்) ஆகிய பணிகள் நடைபெறாது என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT