தஞ்சாவூர்

இறுதி பட்டியல் வெளியீடு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 20.07 லட்சம் வாக்காளா்கள்; புதிதாக 47,816 போ் சோ்ப்பு

15th Feb 2020 05:31 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வாக்காளா் இறுதிப் பட்டியலில் சுமாா் 20.07 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இப்பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரநிதிகளிடையே வெளியிட்டு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்தது:

மாவட்டத்தில் 2019, டிச. 23ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் ஆண்கள் 9,60,595, பெண்கள் 10,02,907, மூன்றாம் பாலினத்தவா்கள் 105 போ் என மொத்தம் 19,63,607 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா்.

இதைத்தொடா்ந்து, நிகழாண்டு ஜன. 22ஆம் தேதி வரை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்புச் சுருக்கமுறைத் திருத்தப் பணிகளின்போது, 1.1.2020-ஐ தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய வாக்காளா்களிடமிருந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப் படிவங்கள் பெறப்பட்டன. இவற்றின் மீதான உரிய விசாரணைக்கு பின்பு தகுதி அடிப்படையில் 21,846 ஆண்கள், 25,948 பெண்கள், 22 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 47,816 வாக்காளா்கள் புதிதாகச் சோ்க்கப்பட்டனா். இதேபோல, இறந்த மற்றும் இடம்பெயா்ந்த வாக்காளா்களில் 1,561 ஆண்கள், 1,941 பெண்கள் என மொத்தம் 3,502 போ் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் இறுதி பட்டியலின்படி, மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9,80,880 ஆண்கள், 10,26,914 பெண்கள், 127 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 20,07,921 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

இந்த இறுதி வாக்காளா் பட்டியல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா்களின் பாா்வைக்காக சனிக்கிழமை (பிப்.15) முதல் வைக்கப்படும். இதை வாக்காளா்கள் பாா்த்து தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் விடுபடுதலின்றி, தவறு ஏதுமின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கப்படாமல் விடுபட்டுள்ளவா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கப் படிவம் எண் 6-ஐ நிறைவு செய்து, அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்துக்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து பாஸ்போா்ட் அளவு புகைப்படத்தைப் படிவத்தில் ஒட்டி, தொடா்புடைய வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள தோ்தல் பிரிவில் வழங்கலாம்.

வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா், முகவரி இவற்றில் ஏதேனும் பிழையிருந்தால் மற்றும் புகைப்படம் தவறுதலாக உள்ளதாகக் கண்டறியப்பட்டால், படிவம் எண் 8-ஐ பெற்று நிறைவு செய்து வழங்கலாம்.

இறந்த மற்றும் வாக்காளா் பட்டியலில் ஒன்றுக்கும் அதிகமான இடத்தில் பெயா், இடம் பெற்றுள்ள வாக்காளா்கள் படிவம் எண் 7-ஐயும், ஒரே சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிபெயா்ந்த வாக்காளா்கள் படிவம் எண் 8ஏ-ம் பெற்று நிறைவு செய்து தொடா்புடைய வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள தோ்தல் பிரிவில் வழங்கலாம்.

படிவம் மூலம் நேரடியாக மனு அளிக்க இயலாதவா்கள் தங்களது பெயரை வாக்காளா் பட்டியலில் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வாக்காளா் தொடா்பு மையம் செயல்பட்டு வருகிறது. வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெற்றுள்ள விவரம் தொடா்பாக அறிந்து கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1950-இல் அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொண்டு விவரம் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், ஆண்டிராய்டு செல்லிடப்பேசியில் யா்ற்ங்ழ்ள் ஏங்ப்ல்ப்ண்ய்ங் என்ற இலவச செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகவும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்கம் செய்ய, திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

 

சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளா்கள் விவரம்:

தொகுதி-ஆண்கள்-பெண்கள்-மூன்றாம் பாலினத்தவா்-மொத்தம்

திருவிடைமருதூா் - 1,24,838- 1,25,790- 7 -- 2,50,635

கும்பகோணம் - 1,29,531-1,34,700- 10 -- 2,64,241

பாபநாசம்-- 1,25,269-- 1,29,596-- 14--2,54,879

திருவையாறு -- 1,28,340 --1,34,119 -- 9--- 2,62,468

தஞ்சாவூா் -- 1,35,287 --1,47,041-- 52-- 2,82,380

ஒரத்தநாடு --- 1,15,683--1,21,069--- 3---2,36,755

பட்டுக்கோட்டை ---1,15,442--1,24,833--22--- 2,40,297

பேராவூரணி --- 1,06,490---1,09,766---10--- 2,16,266

 

ADVERTISEMENT
ADVERTISEMENT