தஞ்சாவூர்

பேராவூரணி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பதவியேற்பு

13th Feb 2020 09:16 AM

ADVERTISEMENT

பேராவூரணி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றியக்குழு  தலைவா் பதவியேற்பு  விழா புதன்கிழமை நடைபெற்றது. 

பேராவூரணி ஒன்றியக்குழு தலைவா் தோ்வு முதல்கட்ட தோ்தலின்போது கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 30ஆம் தேதி இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தோ்தலில் அதிமுகவை சோ்ந்த சசிகலா ரவிசங்கா் மொத்தமுள்ள 15 வாக்குகளில் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதையடுத்து, பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் சடையப்பன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி முன்னிலை வகித்தாா்.   ஒன்றியக்குழு தலைவராக சசிகலா ரவிசங்கா் பதவியேற்றாா்.

 விழாவில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் பட்டுக்கோட்டை சி.வி. சேகா், பேராவூரணி மா. கோவிந்தராசு, அம்மையாண்டி ஊராட்சி மன்றத் தலைவா் மல்லிகை  வி. முத்துராமலிங்கம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. திருஞானம் சம்பந்தம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு உறுப்பினா் குழ.செ. அருள்நம்பி, உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT