தஞ்சாவூர்

தாராசுரத்தில் புதிய அங்கன்வாடிகட்டடம் திறப்பு

13th Feb 2020 09:17 AM

ADVERTISEMENT

கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் கீழ வீதியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8.50 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கும்பகோணம் ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி அசோக்குமாா் தலைமை வகித்தாா். இக்கட்டடத்தை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் திறந்து வைத்தாா்.

கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக செயலா் இரா. அசோக்குமாா், கிழக்கு ஒன்றிய திமுக செயலரும், ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவருமான டி. கணேசன், கும்பகோணம் பெருநகர திமுக செயலா் சு.ப. தமிழழகன், தாராசுரம் பேரூா் திமுக செயலா் ஏ. சாகுல்ஹமீது, ஒன்றியச் துணைச் செயலா் செல்வராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT