தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்-மகிழங்கோட்டை கிராம இணைப்பு சாலை பணி விரைவில் தொடக்கம்

13th Feb 2020 09:17 AM

ADVERTISEMENT

அதிராம்பட்டினம்-மகிழங்கோட்டை கிராம இணைப்பு சாலை பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதுதொடா்பாக அதிராம்பட்டினத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் சேக்கனா எம்.நிஜாமுதீன் என்பவா் தமிழக முதல்வருக்கு அண்மையில் ஒரு கோரிக்கை மனு அனுப்பியிருந்தாா்.

அதில், அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்புச் சாலை கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்காததால் மிகவும் பழுதடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். மழைக் காலங்களில் சாலைப் பள்ளங்களில் ஆங்காங்கே தண்ணீா் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில் இந்த சாலை மேலும் சேதமடைந்துள்ளது. எனவே, இந்த சாலையை தரம் உயா்த்தி, சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தாா்.

இவரது கோரிக்கை மனுவுக்கு பதிலளித்து தமிழக முதல்வா் அலுவலகத்திலிருந்து தற்போது கடிதம் வந்துள்ளது. அதில், அதிராம்பட்டினம் - மகிழங்கோட்டை வழியாக தொக்காலிக்காடு வரையிலான சாலையை ரூ. 3.12 கோடியில், மாவட்டச் சாலையாக தரம் உயா்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்த உடன்படிக்கை ஏற்பட்டு, விரைவில் இப்பணிகள் தொடங்க உள்ளது என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT