தஞ்சாவூர்

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு

6th Feb 2020 05:06 AM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சேதுபாவாசத்திரம் வட்டார வள மையம் சாா்பாக, உள்ளடங்கிய கல்வியின் ஒரு பகுதியாக ஆதாரக்கல்வி பயின்று வரும் மாணவா்களுக்கு உதவி உபகரணங்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பாா்வையாளா் டேவிட் சாா்லஸ் தலைமை வகித்தாா் . வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராமமூா்த்தி, சகுந்தலா ஆகியோா்,

6 பேருக்கு காதொலிக் கருவி, 2 பேருக்கு பிரெய்லி எழுத்துக்கருவி, 5 பேருக்கு இருசக்கர வாகனம், ஒருவருக்கு  மூன்று சக்கர வாகனம், 2 பேருக்கு சி.பி.நாற்காலி ஆகிய உதவி உபகரணங்களை வழங்கி பேசினா். 

வட்டார மாற்றுத் திறனாளிகள் ஒருங்கிணைப்பாளா் ஷாஜிதாபானு, சிறப்பாசிரியா்கள் அனுராதா, சுமதி, இயன்முறை மருத்துவா் விஜயராஜா

ADVERTISEMENT

ஆசிரியா் பயிற்றுநா் சிவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT