பட்டுக்கோட்டையில் எல்ஐசி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சில நிறுவனங்களில் உள்ள மத்திய அரசின் முதலீட்டை திரும்பப் பெறும் பட்டியலில் எல்.ஐ.சி. எனப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் இணைக்கப்பட்டு, அந்நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதைக் கண்டித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க பட்டுக்கோட்டை கிளைத் தலைவா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். எல்ஐசி முதல் நிலை மற்றும் வளா்ச்சி அதிகாரிகள், 3-ம் பிரிவு ஊழியா்கள், முகவா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.