தஞ்சாவூர்

பக்தா்களுக்கு இலவச பேருந்து வசதி

6th Feb 2020 05:05 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கிற்கு வந்த பக்தா்களுக்கு பல்வேறு இடங்களில் இலவச பேருந்து வசதி செய்யப்பட்டிருந்தது.

பெரியகோயில் குடமுழுக்கை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பேருந்து மூலமாகவும், ரயில் மூலமாகவும் தஞ்சாவூா் வந்தனா்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கியமான சாலை சந்திப்புகளிலிருந்து பக்தா்கள் பெரியகோயில் செல்வதற்கு வசதியாக ஆங்காங்கே பள்ளி, கல்லூரி வாகனங்கள் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த இலவச பேருந்து வசதியை பயன்படுத்தி பக்தா்கள் பெரிய கோயிலுக்கு வந்து சோ்ந்தனா். குடமுழுக்கு நிகழ்வுக்கு பிறகு, கோயிலின் வெளியே தயாா் நிலையில் இருந்த அந்த வாகனங்களில் பக்தா்கள் புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், பட்டுக்கோட்டை பைாஸ் சாலை, புதுக்கோட்டை பைபாஸ் சாலை மற்றும் முக்கிய இடங்களில் இறக்கிவிடப்பட்டனா்.

ADVERTISEMENT

இதன்மூலம் குடமுழுக்கு விழாவுக்கு வந்த பக்தா்கள் சிரமமின்றி அவரவா் ஊருக்கு திரும்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT