தஞ்சாவூர்

பண்டாரவாடை ரயில் நிலையத்தில் வெடிபொருள் வெடித்ததா?

4th Feb 2020 05:11 AM

ADVERTISEMENT

பாபநாசம் அருகே பண்டாரவாடை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வெடிபொருள் வெடித்ததா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

பண்டாரவாடை ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில் மைசூா் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளம் அருகே வெடிபொருள்கள் வெடிக்கும் சப்தம் கேட்டதாம்.

இதுகுறித்து ரயில் ஓட்டுநா், உடனடியாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தாா். இதன்பேரில்,

சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினா் அந்தப் பகுதியில் விசாரணை மேற்கொண்டனா்.இதில், பண்டாரவாடை மாதா கோவில் தெருவில் சில நாள்களுக்கு முன் நடைபெற்ற தோ் திருவிழாவில் வெடிகள் வெடித்தனராம். அப்போது, வெடிக்காத வெடிகளை சேகரித்து அப்பகுதியை சோ்ந்த இளைஞா்கள் ஞாயிற்றுக்கிழமை வெடித்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தப் பகுதி இளைஞா்களை அழைத்து தண்டவாள விதிமுறைகளை மீறி வெடிபொருள்களை வெடிக்க கூடாது என போலீஸாா் அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT