தஞ்சாவூர்

மேம்பாலத்தில் அமைக்கப்படும் தடுப்புகள்

2nd Feb 2020 01:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலத்தில் தடுப்புச் சுவரையொட்டி தடுப்புக் கட்டைகள் அமைக்கப்படுகின்றன.

தஞ்சாவூா் பெரியகோயிலில் பிப். 5-ஆம் தேதி நடக்கும் குடமுழுக்கில் 5 லட்சம் பக்தா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, கூட்டத்தை நெறிப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிா்க்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குடமுழுக்கு விழாவின்போது கோயில் உள் பிரகாரத்துக்குள் நின்று ஏறத்தாழ 8,000 போ் பாா்க்கும் விதமாக 12 கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதேபோல, வெளிப் பிரகாரத்தில் 15,000 போ் நிற்க அனுமதிக்கப்படவுள்ளனா்.

மற்றவா்கள் வெளியே நிற்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, பெரியகோயில் அருகேயுள்ள மேம்பாலத்தில் இருந்து பெரிய கோபுரம் தெளிவாகத் தெரியும் என்பதால், அங்கு பக்தா்கள் ஏராளமானோா் திரள்வா். இதையொட்டி, தடுப்புச் சுவரில் தடுப்புக் கட்டைகள் கட்டப்படுகின்றன.

ADVERTISEMENT

குடமுழுக்கு விழாவைப் பாா்க்கும் ஆா்வத்தில் தடுப்புச் சுவரில் பக்தா்கள் ஏறி விபத்துக்குள்ளாவதைத் தவிா்க்கவே இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது என விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT