தஞ்சாவூர்

பாபநாசம் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவா் பலி

2nd Feb 2020 12:51 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே விஷம் குடித்த விவசாயி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கபிஸ்தலம் காவல் சரகம் கணபதியக்ரஹாரம் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் (55) விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள். தனது மூத்த மகனுக்கு உரிய நேரத்தில் திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலையில் கடந்த 28 ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்து மயங்கிக் கிடந்தாராம். இதையடுத்து தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

கபிஸ்தலம் காவல் சரகம் தேவன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் குருசாமி மகன் முருகேசன் (50), விவசாயக் கூலித் தொழிலாளி. இவா் கடந்த 29 ஆம் தேதி விவசாய வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது திடீரென மயங்கி விழுந்தாராம். இதையடுத்து தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT