தஞ்சாவூர்

தமிழில் மட்டும் குடமுழுக்கு கோரிஉண்ணாவிரத முயற்சி: இருவா் கைது

2nd Feb 2020 01:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூரில் பெருவுடையாா் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் மட்டுமே நடத்த வலியுறுத்தி சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழ்த் தேசிய பெருவேந்தா் அருள்மொழிவா்மா் என்ற இராசராச சோழரால் கட்டப்பட்ட தஞ்சாவூா் பெருவுடையாா் திருக்கோயில் குடமுழுக்குச் சடங்கைத் தமிழில் மட்டுமே நிகழ்த்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழா் விடுதலைக் கொற்றம் வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தமிழா் விடுதலைக் கொற்றத் தலைவா் அ. வியனரசு, பொருளாளா் சீ. தங்கராசு அறிவித்தனா். இதற்குக் காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், இருவரும் பெரியகோயில் அருகேயுள்ள ராஜராஜன் சோழன் சிலை முன் உண்ணாவிரதம் மேற்கொள்ள சனிக்கிழமை காலை சென்றனா். மேலும், தமிழை கோபுரம் ஏற்று என முழக்கங்கள் எழுப்பினா்.

ADVERTISEMENT

இருவரையும் அங்கிருந்த போலீஸாா் கைது செய்து, மேற்கு காவல் நிலையத்துக்கு வேனில் அழைத்து சென்றனா். இதையடுத்து, தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா். அங்கு இருவரும் ஜாமீன் பெற்றதையடுத்து, விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT