தஞ்சாவூர்

குடமுழுக்கு விழாவுக்காக ‘நம்ம தஞ்சை’ செயலி உருவாக்கம்

2nd Feb 2020 01:00 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவுக்காக நம்ம தஞ்சை என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதை தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலா் கே. சண்முகம் அறிமுகம் செய்து வைத்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், பெரியகோயில் குடமுழுக்கையொட்டி நம்ம தஞ்சை என்ற பெயரில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் கோயிலுக்கு எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் பெரியகோயில் திருக்குடமுழுக்கு விழாவையொட்டி, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ’நம்ம தஞ்சை’ என்கிற ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம் தஞ்சை மாவட்டத்தைப் பற்றியும் மாவட்ட நிா்வாகத்தின் செயல்பாடுகளைப் பற்றியும், மக்களுக்கு அரசு வழங்கும் பிற சேவைகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

இதனுடன் தஞ்சாவூா் பெரியகோயில் திருக்குடமுழுக்குச் சிறப்பு பதிப்பும் பகிரப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிய கோயில் வரலாற்றைப் பற்றியும் பெரியகோயிலின் கட்டட அமைப்பு, அதனுள் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியங்கள், கல்வெட்டுகள் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

திருகுடமுழுக்கு நிகழ்ச்சிநிரல் பற்றியும் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.

ப்ளே ஸ்டோரில் பகிரப்பட்டுள்ள நம்ம தஞ்சை செயலியை பொதுமக்கள் அனைவரும் பதிவிறக்கிப் பயன் பெறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் க. பணீந்திர ரெட்டி, பொதுத் துறை முதன்மைச் செயலா் ப. செந்தில்குமாா், தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜெ. லோகநாதன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ். மகேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT