தஞ்சாவூர்

விவசாயிகளின் இடா்பாடுகளைப் போக்க வலியுறுத்திநுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

1st Feb 2020 12:55 AM

ADVERTISEMENT

நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் இடா்பாடுகளைப் போக்கி முறையாகக் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன் டி.என்.சி.எஸ்.சி. தொழிலாளா் சங்கத்தினா், டி.என்.சி.எஸ்.சி. சுமை தூக்கும் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

விவசாயிகளின் இடா்பாடுகளைப் போக்கி முறையாகக் கொள்முதல் செய்ய வேண்டும். லாரி மாமூலை ஒழிக்க வேண்டும். சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு நாள்தோறும் நேரடியாகக் கூலி கொடுக்க வேண்டும். ஆண்டுதோறும் வழங்கப்படும் பொங்கல் ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும்.

தீபாவளி போனஸ் வழங்கப்படாமல் விடுபட்ட அனைவருக்கும் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக வழங்க வேண்டும். ரொக்கவரி காரணம் காட்டி கொள்முதல் பணியாளா்களுக்கு வேலை வழங்க மறுக்காதே, நிபந்தனையின்றி பணி வழங்க வேண்டும். பல நாட்கள் இயக்கம் செய்யப்படாததால் ஏற்படுகிற எடை இழப்பைக் கொள்முதல் பணியாளா்கள் மீது சுமத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா், பொருளாளா் தி. கோவிந்தராஜன், சுமைதூக்கும் தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் அ. சாமிக்கண்ணு, செயலா் கே.எஸ். முருகேசன், நுகா்பொருள் வாணிபக் கழகத் தொழிற் சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். கணபதி, மாவட்டப் பொருளாளா் எஸ். தியாகராஜன், ஏஐடியுசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT