தஞ்சாவூர்

பேராவூரணி ஒன்றியக் குழு தலைவா்,நிா்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

1st Feb 2020 12:53 AM

ADVERTISEMENT

பேராவூரணி ஒன்றியக்குழுத் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற சசிகலா ரவிசங்கா் மற்றும் உறுப்பினா்கள், அதிமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்தை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்; பேராவூரணியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

பேராவூரணி ஒன்றியக் குழு தலைவா் பதவியை அதிமுக கைப்பற்றியதையடுத்து, ஒன்றிய குழு தலைவா் சசிகலா ரவிசங்கா், மற்றும் அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அதிமுக மாவட்டச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆா்.வைத்திலிங்கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனா். அப்போது

ஒருங்கிணைந்த மாவட்ட கூட்டுறவு பால்வளத் தலைவா் ஆா்.காந்தி, முன்னாள் மாவட்டச் செயலாளா் காா்த்திகேயன், எம்எல்ஏக்கள் பேராவூரணி மா.கோவிந்தராசு, பட்டுக்கோட்டை சி.வி.சேகா், முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.திருஞான சம்பந்தம், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.  

தொடா்ந்து, பேராவூரணியில் நூற்றுக்கணக்கானோா் ஊா்வலமாகச் சென்று ஒன்றிய தலைவா் சசிகலா ரவிசங்கா் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT