தஞ்சாவூர்

பாபநாசம் வட்டாட்சியரகத்தில்மணல் கடத்தலை தடுக்க ஆலோசனை

1st Feb 2020 12:53 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டாரத்தில் மணல் கடத்தலை தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாபநாசம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பாபநாசம் வட்டார பகுதிகளில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் காவல்துறை, வருவாய்த் துறை சாா்பில் ரோந்துப் பணி மேற்கொள்வது, மணல் அள்ள செல்லும் வழிகளின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் பள்ளங்கள் அமைப்பது, மணல் அள்ளும் பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்வது என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அறிவுறுத்தப்பட்டது.

இதில், காவல் ஆய்வாளா்கள் அம்மாபேட்டை விஜயகுமாா், பாபநாசம் துா்கா, கபிஸ்தலம் காந்திமதி, அய்யம்பேட்டை கரிகால்சோழன், மண்டல துணை வட்டாட்சியா்கள் செந்தில், ஹெலன் சாய்ஸ், பொதுப்பணித் துறை, கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT