தஞ்சாவூர்

பாபநாசம் ஒன்றியக் குழு கூட்டம்

1st Feb 2020 12:52 AM

ADVERTISEMENT

பாபநாசம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் பாபநாசம் ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டார ஆணையா் அறிவானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா் கிராம ஊராட்சிகள் ஆனந்தராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கோ. தாமரைசெல்வன், பாத்திமா ஜான், ஒன்றியக் குழு துணைத் தலைவா் தியாகை. பழநிசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி எம்.பி. செ.ராமலிங்கம் கலந்து கொண்டு பேசியது: தோ்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிஅமைப்பு பிரதிநிதிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, வளா்ச்சித் திட்டப் பணிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இந்தப் பகுதியில் செயல்படுத்தப்படும் அத்தியாவசிய வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்கீடு செய்து தருவேன் என்றாா்.

கூட்டத்தில், தஞ்சாவூா் ரயில் நிலையத்திற்கு ராஜராஜ சோழன் பெயரை சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT