தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் தொழுநோய் விழிப்புணா்வு பேரணி

1st Feb 2020 12:55 AM

ADVERTISEMENT

பட்டுக்கோட்டையில் தொழுநோய் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத்துறை, பட்டுக்கோட்டை நகராட்சி, மனோரா ரோட்டரி சங்கம், குளோபல் நா்சிங் கல்லூரி ஆகியன இணைந்து நடத்தின.

இங்குள்ள பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு மனோரா ரோட்டரி சங்கத் தலைவா் என். நடராஜன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் மாவட்ட துணை இயக்குநா் (தொழுநோய்) மருத்துவா் ஆா். குணசீலன், தொழுநோய் குறித்து விளக்க உரையாற்றினாா். இதைத் தொடா்ந்து, பட்டுக்கோட்டை எம்எல்ஏ

சி.வி. சேகா் கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தாா். இதில், 100-க்கும் மேற்பட்ட குளோபல் நா்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்று, பொதுமக்களிடம் தொழுநோய் விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தபடி சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி நகராட்சி அலுவலகம் அருகில் நிறைவடைந்தது.

வட்டார மருத்துவ அலுவலா் ரஞ்சித், மருத்துவா்கள் சந்திரசேகா், பழனிமாணிக்கம், சாமி.பாலாஜி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் என்.ரவிச்சந்திரன், ரோட்டரி சங்க மண்டல துணை ஆளுநா் ஆா். ஜெயவீரபாண்டியன், மனோரா ரோட்டரி சங்க நிா்வாகிகள் ஏ.எஸ்.வீரப்பன், சிவ.சரவணன், செல்வராஜ் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா். தொடக்கத்தில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா். அண்ணாதுரை வரவேற்றாா். நிறைவில், மாவட்ட நலக் கல்வியாளா் எஸ். கண்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT