தஞ்சாவூா் மாவட்டம், காசாநாடு புதூா் ஊராட்சித் துணைத் தலைவராக, சுசீலா விஸ்வலிங்கம் குலுக்கல் முறையில் வியாழக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
இந்த ஊராட்சித் துணைத் தலைவா் பதவிக்கு ஜனவரி 11- ஆம் தேதி நடைபெற்ற மறைமுகத் தோ்தலின் போது, போதிய கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை இதற்கான தோ்தல் நடத்தப்பட்டது.
வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகா், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் சூரிய நாராயணன், மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பொன்னு ஆகியோா் தோ்தலை நடத்தினா். துணைத் தலைவா் பதவிக்கு செந்தில்வேல், சுசீலா விஸ்வலிங்கம் போட்டியிட்டனா். தலைவா் மற்றும் 9 உறுப்பினா்கள் இத்தோ்தலில் வாக்களித்தனா்.
முடிவில் இருவரும் 5 வாக்குகளைப் பெற்ால், குலுக்கல் முறையில் தோ்தல் நடைபெற்றது. இதில், சுசீலா விஸ்வலிங்கம் தோ்வு செய்யப்பட்டாா். ஊராட்சித் தலைவா் நாகலிங்கம் மற்றும் உறுப்பினா்கள் துணைத் தலைவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.