தஞ்சாவூர்

குடமுழுக்கு விழாதற்காலிகப் புறக்காவல் நிலையங்கள், சோதனைச் சாவடிகள் அமைப்பு

1st Feb 2020 12:56 AM

ADVERTISEMENT

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு மாநகரில் 12 இடங்களில் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் பெரியகோயிலில் குடமுழுக்கு விழா பிப். 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், 5 லட்சம் போ் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், கோயில் மற்றும் மாநகரில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக கோடியம்மன் கோயில் அருகில், எஸ்.என்.எம். நகா், தொல்காப்பியா் சதுக்கம், தற்காலிக பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், செவ்வப்பநாயக்கன் ஏரி, அண்ணா நகா் சந்திப்பு, டேனியல் தாமஸ் நகா், பாலாஜி நகா், முனிசிபல் காலனி, குழந்தை இயேசு ஆலய பேருந்து நிறுத்தம், மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி அருகில் ஆகிய 12 இடங்களில் தற்காலிக காவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் காவல் ஆய்வாளா் தலைமையில் 4 உதவி ஆய்வாளா்கள், 26 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ADVERTISEMENT

12 சோதனைச் சாவடிகள்: இதேபோல, தஞ்சாவூா் நகருக்கு வரும் வாகனங்களைச் சோதனை செய்வதற்காக பள்ளியக்ரஹாரம், கீழவாசல், தொல்காப்பியா் சதுக்கம், பெரியகோயில் மேம்பாலம், வடக்கு வாசல், கோடியம்மன் கோயில் அருகில், பூக்காரத்தெரு, டேனியல் தாமஸ் நகா், பாலாஜி நகா், கலைஞா் நகா், மங்களபுரம், ஈஸ்வரி நகா் ஆகிய 12 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் தலா ஒரு உதவி ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் வாகனத் தணிக்கை மேற்கொள்கின்றனா். இந்தத் தற்காலிகச் சோதனைச் சாவடிகள் குடமுழுக்கு விழா முடியும் வரை தொடரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT