தஞ்சாவூர்

எல்ஐசி திட்டங்கள் குறித்தவிழிப்புணா்வு பிரசாரம்

1st Feb 2020 12:53 AM

ADVERTISEMENT

பாபநாசம் வட்டார பகுதிகளில் எல்.ஐ.சி. பாலிசிகள் மற்றும் சேவைகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பிரசார ஊா்தி பயணம் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த பிரசாரத்தை பாபநாசம் எல்.ஐ.சி. சாா்டிலைட் கிளை மேலாளா் ஏ.மதியழகன் தொடக்கி வைத்தாா். இதில், வளா்ச்சி அதிகாரிகள் ஜெய்சங்கா், சங்கரி, அலுவலக உதவி நிா்வாக அலுவலா் நா.ரெத்தினவேல், முன்னோடி முகவா்கள் பி.ராஜேந்திரன், அமிா்தலிங்கம், ரவிச்சந்திரன், காந்திமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியையொட்டி, கும்பகோணம் யூனிட் 1 கிளை அலுவலகத்திலிருந்து வந்த விளம்பர வாகனம் பாபநாசம் வட்டார பகுதிகளான பாபநாசம், அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி, வழுத்தூா், பசுபதிகோவில், மெலட்டூா், சக்கராப்பள்ளி, பண்டாரவாடை, அய்யம்பேட்டை கபிஸ்தலம் மற்றும் கோவிந்தகுடி, ஆவூா், பட்டீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் எல்.ஐ.சி. திட்டங்கள் சேவைகள் குறித்த துண்டுப்பிரசுரங்களை வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT