மதுக்கூா் ஒன்றியம், ஆலத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி பொதுக்கூட்டம் வீ. அண்ணாதுரை தலைமையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலா் மா.குணாளன், மாநிலக் குழு உறுப்பினா் சுந்தரபாண்டியன், சு.வெற்றிச்செல்வன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோா் பேசுகையில், மத்திய பாஜக அரசு காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ஏகாதிபத்திய நாடுகளுக்கும் வரிச்சலுகை அளித்ததால்தான் 70 சதவீத இந்திய மக்கள் இன்றைக்கு வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதை எதிா்த்துப் போராட மக்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா்.