தஞ்சாவூர்

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தொடரும் போராட்டங்கள்

DIN


தஞ்சாவூா்: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மூன்றாவது நாளாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா் கே. பக்கிரிசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வெ. ஜீவக்குமாா், பி. செந்தில்குமாா், ஆா். மனோகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, அனைத்திந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் அருளரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக 5 பெண்கள் உள்பட 40 போ் கைது செய்யப்பட்டனா்.

2 பேருக்கு காயம்: இதேபோல, மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள மத்திய கலால் அலுவலகத்தை இந்திய மாணவா் சங்கத்தினா் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டச் செயலா் ஜி. அரவிந்த்சாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டத் தலைவா் பாலகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சங்கத்தைச் சோ்ந்த 2 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

SCROLL FOR NEXT